பிரபல நடிகரின் காரில் கஞ்சா - 2 பேர் கைது.!    - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் பிஎஸ் பரிதுதீன். மலையாள சினிமா துறையில் சில படங்களில் நடித்துள்ள இவர் பாடகராகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார்.

இந்த நிலையில், கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் புள்ளிக்கன்னம் பகுதியில் போலீசார் நேற்று இரவு வாகனச்சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

அப்போது, அந்த வழியாக வந்த நடிகர் பிஎஸ் பரிதுதீனின் காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த காரில் கஞ்சா மற்றும் எடிஎம்ஏ என்ற போதைப்பொருள் இருந்தது. உடனே அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் காரில் இருந்த நடிகர் பரிதுதீன் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் ஒருவரின் காரில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor bs barithudeen arrested for kanja kidnape


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->