நடிகர் மோகன் பாபு மருத்துவமனையில் திடீர் அனுமதி..!
actor mohan babu admitted hospital
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமைந்துள்ள நடிகர் மோகன் பாபுவின் இல்லத்தில், நேற்று அவரது மகன் மஞ்சு மனோஜ் சிலருடன் நுழைய முயன்றபோது பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மோகன் பாபுவின் பவுன்சர்கள், தனிப்படை போலீசார் ஆகியோர் செய்தியாளர்களை விரட்டியடித்தனர். மேலும், நடிகர் மோகன் பாபு சில செய்தியாளர்களின் மைக்கை பிடுங்கி தாக்கிய வீடியோவும் வைரலானது.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த இரண்டு செய்தியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தெலுங்கு பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து செய்தியாளர்களை தாக்கியது தொடர்பாக மோகன் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் மோகன் பாபு உயர் ரத்த அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மோகன் பாபு மற்றும் அவரது மகன் மஞ்சு மனோஜ் ஆகியோரிடையே நீண்ட நாட்களாக சொத்து பிரச்சனை இருந்து வருகிறது. தந்தை தன்னை தாக்கியதாக மகனும், மகன் தன்னை தாக்கியதாக தந்தையும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து வருவது பரபரப்பு கிளப்பியுள்ளது.
English Summary
actor mohan babu admitted hospital