ராமர் கோவில் கும்பாபிஷேகம் - விருந்து செலவை ஏற்கும் பிரபல நடிகர்.! - Seithipunal
Seithipunal


அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் ஜனவரி மாதம் 22 -ம் தேதி நடைபெற உள்ளது. அப்போது, ராமர் கோவிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நிறுவ உள்ளார். இதற்கிடையே, மைசூரு சிற்பி தயாரித்த குழந்தை ராமர் சிலை அயோத்திக்கு கொண்டுவரப்பட்டு நேற்று கருவறையில் நிறுவப்பட்டது. 

இந்தக் கோவில் கும்பாபிஷேகத்திற்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களும், கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், ஜனவரி மாதம் 22 -ஆம் தேதி நடைபெற இருக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது முதல் நாள் விருந்து செலவு அனைத்தையும் நடிகர் பிரபாஸ் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது, முதல் நாளில் திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், வெளிநாட்டு அதிகாரிகள் என்று சுமார் 800 பேர் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

மேலும், அன்று ஒரு நாள் விருந்து செலவு மட்டும் ரூ.50 கோடி வரை ஆகலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த செலவை நடிகர் பிரபாஸ் ஏற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், பல சினிமா பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் பிரபாஸுக்கு கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor prabhas cost of 50 crores to ramar temple party


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->