யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடம் பெற்ற சிவசந்திரனுக்கு வாழ்த்துக்களும்... முதலமைச்சருக்கு பாராட்டுக்களும்...!!! - செல்வப் பெருந்தகை
Congratulations Sivachandran topped UPSC exam tn and compliments cm Selva Perunthakai
யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 23-வது இடமும், தமிழ்நாட்டு தரவரிசையில் முதலிடமும் பெற்று மாணவர் 'சிவச்சந்திரன்' சாதனை படைத்துள்ளார். இவர், "நான் முதல்வன்" திட்டத்தில் பயிற்சி பெற்றதே இதற்கு காரணமாகும்.

இதனை குறிப்பிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் 'செல்வப்பெருந்தகை' தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
செல்வப்பெருந்தகை:
அதில், அவர் தெரிவித்திருப்பதாவது,"யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது இந்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம். அதில் உயர்கல்வியை நோக்கிய ஒரு பயணத்திட்டமான 'நான் முதல்வன்' திட்ட போட்டி தேர்வுகள் பிரிவு மூலம் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன் அகில இந்திய அளவில் தரவரிசையில் 23ம் இடமும், தமிழ்நாட்டில் முதலிடம் பெற்றுள்ள செய்தியறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், தேர்ச்சி பெற்ற 50 பேரில் 18 நபர்களும் நான் முதல்வன் திட்டத்தில் முழுநேரமும் தங்கியிருந்து பயிற்சி பெற்றவர்கள் என்பதும், தமிழ்வழியில் தேர்வு எழுதிய காமராஜர், சங்கர் பாண்டியராஜ் ஆகியோர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.நான் முதல்வன் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நோக்கத்திற்காக கொண்டு வந்தார்களோ, அது முழுமையாக நிறைவேறியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று தேவையில்லை.
இந்நேரத்தில் முதலமைச்சருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Congratulations Sivachandran topped UPSC exam tn and compliments cm Selva Perunthakai