நான் முதல்வன் மூலம் மத்திய அரசு பணிக்கு தேர்வாகியுள்ள தமிழ்நாடு இளைஞர்களுக்கு எனது அன்பும் வாழ்த்துக்களும்...! - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
love and congratulation youth TN who selected central government jobs through Nan Multhavan Udhayanidhi Stalin
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'நான் முதல்வன்' குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்:
அதில் அவர் குறிப்பிட்டதாவது,"முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத்திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் குடிமைப்பணி தேர்விற்காக தமிழ்நாடு அரசு பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெற்றவர்களில், 50 பேர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ள செய்தி அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.
குறிப்பாக, மாநில அளவில் முதலிடமும் - அகில இந்திய அளவிலான தரவரிசைப்பட்டியலில் 23-ம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ள தம்பி சிவச்சந்திரன், அகில இந்திய அளவில் 39-வது இடத்தை பிடித்துள்ள தங்கை மோனிகா ஆகியோருக்கு என்னுடைய பாராட்டுகள்.
நான் முதல்வன் திட்டம், இலக்கை நோக்கி சரியான திசையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிலிருந்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நான் முதல்வன் மூலம் மத்திய அரசுப்பணிக்கு தேர்வாகியுள்ள தமிழ்நாட்டு இளைஞர்கள், ஏழை - எளிய மக்கள் மேன்மையடையும் வண்ணம் செயலாற்றிட என் அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி நான் முதல்வன் திட்டத்தை பாராட்டி பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் வந்துகொண்டு இருக்கிறது.
English Summary
love and congratulation youth TN who selected central government jobs through Nan Multhavan Udhayanidhi Stalin