ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை ஆதாரமற்றது.. அதானி குழுமம் விளக்கம்..!!
Adani Group explains statement issued by Hindenburg was baseless
ஹிடண்டன்பர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை பெரும் சர்சையை கிளப்பியுள்ளது. அதானி குழுமம் பங்குகளை கையாளுவதிலும் மற்றும் அக்கவுண்ட்ஸ் மோசடியிலும் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனால் அதானி குழுமம் சுமார் ரூ.46 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளை இழந்துள்ளது.
ஹிண்டன்ப்ர்க் அறிக்கையின் படி அதானி குடும்பத்தின் நிறுவனரும் தலைவருமான கௌதம் அதானி அக்குழுமத்தின் 7 முக்கிய நிறுவனங்களின் பங்கு விலையை உயர்வாக காட்டி நிகர மதிப்பில் 120 பில்லியன் டாலர் வரை உயர்த்தியுள்ளது. அந்த நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 819% பங்குகள்அதிகரித்து உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
இந்தநிலையில் ஹிண்டன்பர்க் வெளியிட்ட தகவலுக்கு மறுப்பு தெரிவித்து அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்"ஆசியாவின் மிகப்பெரிய நிறுவனமான அதானி குழுமத்தின் அதானி என்டர்பிரைசஸ் பிஎஃப்ஓ மீது கொண்ட மோசமான நோக்கம் காரணமாக ஹிண்டன்பர்க் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஹிண்டன்பர்க் இந்த அறிக்கையை வெளியிடும் முன் அதானி குழுமத்தின் தகவலை சரி பார்ப்பதற்கு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. இது தொடர்பான தகவலை பெற எங்களையும் தொடர்பு கொள்ளவில்லை. தவறான தகவல் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் அதானி குழுமத்தின் நற்பெயரை பாதிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது என அதானி குழும நிர்வாக இயக்குனர் ஜுகேந்திரன் சிங் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
English Summary
Adani Group explains statement issued by Hindenburg was baseless