மணிப்பூரில் அடங்காத கலவரம்.. கூடுதல் ராணுவ வீரர்களை களமிறக்கிய மத்திய அரசு.!! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ம் தேதி கலவரம் வெடித்ததை அடுத்து மூன்று மாதங்களாக அம்மாநில மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் இப்படித்தான் வீடியோ வெளியாகி இந்தியாவையே கொந்தளிக்க செய்தது.

மூன்று மாதங்களுக்குப் பிறகு வன்முறை சம்பவங்கள் குறைந்து விட்டதாக அம்மாநில அரசு தெரிவித்தாலும் நேற்று முதல் வன்முறை மீண்டும் வெடித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கலவரத்தால் 6 பேர் கொல்லப்பட்ட நிலையில் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மணிப்பூரில் மீண்டும் கலவரம் அதிகரிக்க தொடங்கியதால் பதட்டமான சூழல் நிலவில் வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசு கூடுதலாக மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லை பாதுகாப்பு படை, இந்தோ திபெக் எல்லை பாதுகாப்பு படை, சசாஸ்திர சீமா பால் உள்ளிட்ட துணை ராணுவ படைகளை சேர்ந்த 900 வீரர்களை மத்திய அரசு அனுப்பி உள்ளது.

அவர்கள் அனைவரும் நேற்று இரவு மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலுக்கு வந்தடைந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Additional troops went to Manipur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->