சிவில் சர்வீஸ் தேர்வாளர்களின் கவனத்திற்கு; மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..? - Seithipunal
Seithipunal


சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே, வயது மற்றும் இட ஒதுக்கீடு கோரிக்கை தொடர்பான சான்றிதழ்களை தாக்கல் செய்ய வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற பின், வயது, இட ஒதுக்கீடு கோரிக்கை தொடர்பான சான்றிதழ்களை தாக்கல் செய்யும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது.

பூஜா கேத்கர் என்ற முன்னாள் பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரி, இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை முறைகேடாக பெற்றதாக சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்டது.

இந்த விவகாரம், தேசிய அளவில் பரபரப்பை உண்டாக்கியது. இதை தொடர்ந்து, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான சான்றிதழ் சமர்ப்பிப்பில் மத்திய அரசு மாற்றங்களை அறிவித்துள்ளது.

அதன்படி,  முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே, வயது மற்றும் இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பான சான்றிதழ்களை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Age and reservation request certificates are mandatory for civil service candidates


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->