முதன்முறையாக இரவில் பரிசோதனை.. வெற்றி பெற்றது "அக்னி பிரைம்"..!! - Seithipunal
Seithipunal


அணு ஆயுதம் ஏந்தி செல்லும் நவீன அக்னி பிரைம் ஏவுகணை ஒடிசா கடற்கரைக்கு அருகே உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு நேற்று சோதனை செய்தது. இந்த சோதனையில் அனைத்து அம்சங்களும் வெற்றிகரமாக செயல்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் அக்னி பிரைம் ஏவுகணை ஏற்கனவே மூன்று முறை சோதனையின் அடிப்படையில் செலுத்தப்பட்டது. அதன் துல்லியம் மற்றும் செயல்முறையின் நம்பகத்தன்மை அடிப்படையில் உறுதி செய்யப்பட்டு இராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கு முன் இரவு நேர பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

முதன்முறையாக நடத்தப்பட்ட இரவு பரிசோதனையின் போது ரேடார், டெலிமெட்ரிக், மின்னணு கண்ணாடி இலை கண்காணிப்பு செயல்முறை போன்றவை அமைக்கப்பட்டிருந்தது. அக்னி பிரைம் ஏவுகணையின் வெற்றிகரமான சோதனைக்காகவும் மிக சிறப்பான செயல்பாட்டுக்காகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினர், ராணுவத்தினர் ஆகியோரை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் பாராட்டியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Agni Prime won first time experiment at night


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->