தீவிரமடையும் அக்னிபத்துக்கு எதிரான போராட்டம்.. பீகாரில் பள்ளி பேருந்து மீது தாக்குதல்.!
Agnipath scheme against bhihar in school bus attack
நாடு முழுவதும் அக்னிபத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பீகாரில் பள்ளி பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அதன்படி, முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்திருந்தார்.
இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் "அக்னி வீர் " எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 45 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட உள்ள நிலையில், இதற்கு வயது வரம்பு 17.5 - 21 வயது வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.பின்னர்,பணி நிறைவு பெறும் வயது 21-லிருந்து 23 ஆக உயர்த்தப்பட்டது. இதில், 4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக ஆளும் உத்தரபிரதேசம், பீகார், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் ராணுவ பணியில் சேர பயிற்சி பெற்று வருபவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் வன்முறை வெடித்துள்ள நிலையில், பீகாரில் தர்பங்காவில் பள்ளி பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
English Summary
Agnipath scheme against bhihar in school bus attack