கொச்சி விமான நிலையம்: 1.5 கிலோ தங்கம் பறிமுதல் - ஏர் இந்தியா கேபின் ஊழியர் கைது - Seithipunal
Seithipunal


கொச்சி விமான நிலையத்திற்கு 1.5 கிலோ தங்கம் கடத்தி வந்த ஏர் இந்தியா கேபின் ஊழியரை அதிகாரிகள் கைது செய்தனர்.

கேரளா மாநிலம் கொச்சி விமான நிலையத்திற்கு பஹ்ரைன் நாட்டிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பஹ்ரைன் நாட்டிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில் பயணிகளிடம் தங்கம் சிக்காததால், சந்தேகத்தின் அடிப்படையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கேபின் ஊழியர் ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் அந்த ஊழியரின் முழு கை சட்டையை அகற்றியபோது இரண்டு கைகளிலும் தங்க பசை ஒட்டப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடமிருந்த 1.487 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த ஊழியரை கைது செய்தனர். மேலும் அவர் வயநாட்டை சேர்ந்த ஷபி என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த தங்கம் கடத்தல் தொடர்பாக ஊழியரிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Air India Cabin Staffer Arrested At Kochi Airport For Smuggling 1 point 5 Kg Gold


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->