ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம்! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


விமான போக்குவரத்து இயக்குனரகம், விதிமுறைகளை முழுமையாக பின்பற்றாத ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 

டெல்லி, கொச்சி, பெங்களூர் போன்ற விமான நிலையங்களில் விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் கடந்த மே மாதம் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது விமானங்கள் தாமதமாக இயக்குதல், விமானங்கள் திடீரென ரத்து செய்யப்படுதல், பயணிகளை விமானத்தில் ஏற்ற மறுப்பது என ஏர் இந்தியா நிறுவனம் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது. 

இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் கடந்த நவம்பர் 3ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. 

ஏர் இந்தியா விமான நிறுவனம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்நிலையில் விமான சேவையில் பயணிகளுக்கு குறைபாடு இருந்ததால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என தெரிவித்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 

மீண்டும் இரண்டாவது முறையாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Air India Rs10 lakh fine


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->