டெல்லியை சூறையாடும் காற்று மாசுபாடு.! சுவாசக்கோளாறினால் பொதுமக்கள் அவதி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டின் காரணமாக தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை மீறி பட்டாசு வெடிபவர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், இந்த அறிவிப்பையும் மீறி மக்கள் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடியதால் தீபாவளி அன்று உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி மாறியது. 

இதையடுத்து, டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள என் சி ஆர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே காற்றின் தரம் தொடர்ந்து மோசமாகி வருகிறதனால் சுவாசக்கோளாறு பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 364 என்ற அளவில் பதிவாகியுள்ளது. அதில், டெல்லி விமானநிலைய பகுதியில் காற்றின் தரக் குறியீடு 333ஆகவும், நொய்டாவில் 393ஆகவும் குருகிராமில் 318 ஆக பதிவாகி 'மிகவும் மோசம்' என்ற நிலையில் நீடிக்கிறது.

இதனால், டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள என் சி ஆர் பகுதிகளில் பனிமூட்டம் போல் காற்றுமாசு தூசி நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக  பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மேலும், காலையில் நடைபயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி செய்பவர்கள், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாசு நிறைந்த காற்றை சுவாசிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் கவலை தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

air polution in delhi peoples admited hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->