டெல்லியில் மீண்டும் மோசமடைந்த காற்றின் தரம்!
Air quality worsened again in Delhi
தலைநகரம் டெல்லியில் காற்றின் தரம் தற்போது மிகவும் மோசமான பிரிவில் இருந்து தீவிரம் என்ற நிலைக்கு மீண்டும் சென்றுள்ளது.
காற்றின் தரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சற்று மேம்பட்டு இருந்த நிலையில் ஒரு வார காலத்தில் மீண்டும் மோசம் அடைந்து வருகிறது.
இன்று காலை காற்றின் தர குறியீடு 401 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 19 ஆம் தேதி டெல்லியில் காற்றின் தர குறியீடு 301 ஆக பதிவாகியிருந்த நிலையில் கடந்த 5 நாட்களில் 100 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
டெல்லியில் கட்டுமான பணி மற்றும் கனரக வாகனங்கள் நுழைய நடவடிக்கை அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் காற்றின் தரம் சற்று மேம்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டிருந்த தீவிர கட்டுப்பாடுகளை கடந்த சனிக்கிழமை மத்திய அரசு தளர்த்தியது.
இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தற்போது விலக்கப்பட்டிருப்பதால் மீண்டும் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Air quality worsened again in Delhi