அண்ணா பல்கலை. வழக்கு: கைதான ஞானசேகரனுக்கு நாளை அடுத்தகட்ட சோதனை!
AU Case Update
அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில், குரல் மாதிரி பரிசோதனை இன்று முடிக்கப்பட்டு, பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், நாளை காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓரிரு தினங்களில் ரத்தப் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் தயாராகியவுடன், அதற்கான அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.