ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.. மீண்டும் உயரும் கட்டணம்.. குறைந்த பட்ச ரீசார்ஜ் 300.?
Airtel recharge packages increase
ஏர்டெல் நிறுவனம் எந்த ஆண்டு மொபைல் போன் மற்றும் டேட்டா கட்டிடங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான சுனில் மெட்டல் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் குறைந்தபட்ச ரீசார்ஜ் ஆன 28 நாட்கள் வேலிடிட்டி சேவையை ரூ.99 இருந்து சுமார் 57 சதவீதம் அதிகரித்து ரூ.155 ஆக நிர்ணயம் செய்தது.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பேசிய ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் மெட்டல் விரைவில் நாடு முழுவதும் கட்டண உயர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
அதன்படி கட்டண உயர்வு குறித்து அவரிடம் கேட்டபோது பொதுமக்கள் மற்ற விஷயங்களுக்கு செலவிடும் செலவுகளை ஒப்பிடும்போது இந்த விலை உயர்வு குறைவாகத்தான் உள்ளது. அதேபோல் பொதுமக்களின் தனி நபரின் சம்பளம் உயர்ந்துள்ளது வாடகை உயர்ந்துள்ளது. கட்டண உயர்வு குறித்து யாரும் குறை கூறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நிறைய முதலீடுகளை ஏர்டெல் நிறுவனத்தில் போட்டுள்ளதாகவும், ஆனால், வருவாய் மிகக் குறைவாக உள்ளதாகவும் கூறியுள்ளார். அதன் காரணமாக மொபைல் டேட்டா மற்றும் பேசுவதற்கான ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக கூறியுள்ளார்.
இதன் மூலம் ஏர்டெல் குறைந்தபட்ச ரீசார்ஜ் ரூ.200 அல்லது ரூ.300 ஆக நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது, ஏர்டெல் பயனாளர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
English Summary
Airtel recharge packages increase