ஆலப்புழாவில் பரவும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்: பீதியில் மக்கள்!
Alappuzha African swine fever spreading
கேரளா, ஆலப்புழாவில் உள்ள தண்ணீர்முக்கம் பகுதியில் உள்ள பன்றி பண்ணையில் 2 பன்றிகள் வினோத நோயால் பாதிக்கப்பட்ட திடீரென உயிரிழந்துவிட்டது.
இதனை அடுத்து பன்றிகளின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்த போது, இறந்த இரண்டு பன்றிகளுக்கும் கொடிய வைரஸ் நோயான ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து மாநில சுகாதாரத் துறை மற்றும் கால்நடை துறையை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பன்றிகள் இருந்த பகுதிகளில் உள்ள பன்றிகளை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி 9 பெரிய பன்றிகள் மற்றும் 9 குட்டி பன்றிகள் கொல்லப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு புதைக்கப்பட்டது.
மேலும் தொற்று பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் பன்றி இறைச்சி விற்பனைக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மற்ற பகுதிகளுக்கும் அந்த பகுதிகளில் இருந்து இறைச்சியை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
Alappuzha African swine fever spreading