பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: டில்லியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது..!
All party meeting has begun in Delhi to discuss the Pahalgam terror attack
காஷ்மீர் தாக்குதல் குறித்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் டில்லியில் தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர், நட்டா, நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பில், விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. குறிப்பாக ராஜ்யசபா அல்லது லோக்சபாவில் 05 அல்லது அதற்கு மேற்பட்ட எம்.பி.,க்களை கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த கூட்டம் டில்லியில் தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர், நட்டா, நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல், திமுக எம்.பி., திருச்சி சிவா, சமாஜ்வாதி, திரிணமுல், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் மற்றும் அரசு எடுத்த நடவடிக்கை மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்த கூட்டம் தொடங்கிய போது தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
English Summary
All party meeting has begun in Delhi to discuss the Pahalgam terror attack