பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், மத்திய அரசின் சதி என பேசிய அசாம் எம்.எல்.ஏ., தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது..!
Assam MLA said that the Pahalgam terrorist attack was a conspiracy by the central government has been arrested on charges of sedition
ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டை உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கு மத்திய அரசின் சதி தான் காரணம் என்று அசாம் எம்.எல்.ஏ., அமினுல் இஸ்லாம் கூறியுள்ளார்.
இதனால் அவர் தேச துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். தாக்குதல் சம்பவம் தொடர்பில் அசாமை சேர்ந்த ஏ.ஐ.டி.யு.எப்., கட்சி எம்.எல்.ஏ., அமினுல் இஸ்லாம் என்பவர் பேசிய வீடியோ வெளியானது. அதில் அதில் தாக்குதல் சம்பவம் மத்திய அரசின் சதி என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இது மிகவும் மோசமான தேச துரோக செயல் என்று கருதிய அசாம் அரசு அவரை கைது செய்துள்ளது. அவர் மீது தேச துரோக குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளதாக, மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
English Summary
Assam MLA said that the Pahalgam terrorist attack was a conspiracy by the central government has been arrested on charges of sedition