மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து.! - Seithipunal
Seithipunal


மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஜம்மு காஷ்மீர் இமயமலையில் 3 ஆயிரத்து 180 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை கோவில் அமைந்துள்ளது.

இங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடை காலத்தில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரை நடைபெறவில்லை.

இதையடுத்து தொற்று குறைந்துள்ளதால் கடந்த ஜூன் 30ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கிய நிலையில், தற்போது பருவமழையால் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பஹல்காம் முகாமிலிருந்து பக்தர்கள் அமர்நாத் குகைக் கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amarnath Yatra temporarily cancelled


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->