பிரமிப்பூட்டும் அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம்!
Amazing Ayodhya Ram Temple Construction!
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்கட்சி தலைவர்கள், திரைத்துறை சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
அயோத்தியில் ராமர் கோவில் நாகர் பாரம்பரிய முறையில் 3 மாடிகளை கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 380 அடியும், அகலம் 250 அடியும், உயரம் 161 அடியாகவும் உள்ளது.
ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது அதில் 392 தூண்களும் 44 கதவுகளும் உள்ளன. பிரதான கருவறையில் ராமர் சிலையும் முதல் தளத்தில் ஸ்ரீராம் தர்பாரும் அமைக்கப்பட்டுள்ளது
கோவிலில் நித்திய மண்டபம், ரேங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மண்டபம் மற்றும் கீர்த்தனை மண்டபம் என ஐந்து மண்டபங்கள் உள்ளன. ஒவ்வொரு தூண்கள் மற்றும் சுவர்களில் தெய்வங்களின் சிலை உள்ளது. கோயிலின் கிழக்கு திசையில் இருந்து 32 படிக்கட்டுகளை பயன்படுத்தி பக்தர்கள் கோயிலுக்குள் நுழையலாம். கோயில் வளாகத்தின் நான்கு மூலைகளிலும் சூரிய பகவான் பகவதி அம்மன் விநாயகர் மற்றும் சிவபெருமானுக்கு கோயில்கள் உள்ளன.
அதேபோல் வடக்கு பகுதியில் அன்னபூரணியின் ஆலயமும் தெற்கு பகுதியில் அனுமன் ஆலயமும் உள்ளன. கோயிலின் அடித்தளம் 14 மீட்டர் தடிமனமான ரோலர் காம்பேக்ட் செய்யப்பட்ட கான்கிரீட் அடுக்குடன் கட்டப்பட்டுள்ளது
யாத்திரிகளுக்காக 25 ஆயிரம் பேர் தங்குவதற்கு மருத்துவ வசதி கொண்ட பிரமாண்டமான யாத்திரிகர் வசதி மையம் கட்டப்பட்டு வருகிறது. கோவில் முற்றிலும் பாரதத்தின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது.
20 ஏக்கர் பரப்பளவில் 70 சதவீதம் பசுமையாக இருப்பதால் சுற்றுச்சூழல் நீர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் ஒன்னரை லட்சம் பத்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தொடங்கிய பின் காலி மனையின் விலையை கேட்டல் தலையே சுற்றுகிறது. ஒரு செண்ட் மனையின் விலை 1 கோடி வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. ராமர் கோவிலின் பிரமிப்பூட்டும் கட்டுமானம், வாழ்வில் ஒருமுறையாவது அயோத்திக்கு சென்று ராமரை தரிசித்திவிட வேண்டுமென்ற எண்ணம் ஆன்மிக அன்பர்களுக்கு ஏற்படுவதை தடுக்க இயலாது.
English Summary
Amazing Ayodhya Ram Temple Construction!