இந்தியாவில் மேலும் 15 பில்லியன் டாலர் முதலீடு - அமேசான் சிஇஓ அறிவிப்பு
Amazon invest to 15 billion dollar more in india
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மேலும் இந்த சந்திப்பின் பொழுது இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகரீதியான உடன்படிக்கைகள் கையெழுத்தானது.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, அமெரிக்க தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், டெஸ்லா மற்றும் அமேசான் உள்ளிட்ட வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில் இ-காமர்ஸ் ஜாம்பவான் அமேசான் இந்தியாவில் மேலும் 15 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவன சி.இ.ஓ ஓஆண்டி ஜாஸ்ஸி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளிடம் பேசிய ஆண்டி ஜாஸ்ஸி, "பிரதமர் மோடியுடன் நான் மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள உரையாடலை மேற்கொண்டேன். இந்தியாவில் வர்த்தக ரீதியிலான இலக்குகளை அடைய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அமேசான் இதுவரை இந்தியாவில் 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்துள்ளோம். மேலும் 15 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளோம். இதன் மூலம் மொத்த முதலீடு 26 பில்லியன் டாலர்களாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Amazon invest to 15 billion dollar more in india