ஐ.ஏ.எஸ். விதிகளில் மாற்றம் ஏன்? - மத்திய அமைச்சர் விளக்கம்.!
Amendment in IAS ACT
தேவையான அளவிற்கு அதிகாரிகளை மாநில அரசுகள் அனுப்பாததால் தான் ஐ.ஏ.எஸ். விதிகளை திருத்தி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஐ.ஏ.எஸ். விதிகளில் மாற்றம் கொண்டு வர முயற்சிப்பது தொடர்பா மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப் பூர்வமான பதிலை தக்கல் செய்துள்ளார். அதில், மாநிலங்களில் இருந்து மத்திய பணிக்கு ஒதுக்கப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை 40 விழுக்காட்டிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என இந்திய ஆட்சிப் பணி விதி 1955 -இல் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் மாநில அரசுகள் போதிய எண்ணிக்கையில் அதிகாரிகளை மத்திய அரசுக்கு அனுப்புவதில்லை என்றும், அதன் காரணமாகவே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமலேயே மத்திய அரசு பணிக்கு மாற்றும் வகையில், திருத்தம் மேற்கொள்ள மாநிலங்களின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறான திருத்தங்களால் மாநில அரசுகளின் நிர்வாகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.