அமெரிக்கா || கால்பந்து போட்டியில் நடந்த துப்பாக்கிச் சூடு.! மூன்று பேர் படு காயம்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள ஒஹியோ மாகாணத்தில் தொலிடோ நகரில் அமைந்த விட்மர் உயர்நிலை பள்ளியில் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், நேற்றிரவு விட்மர் பள்ளிக்கும், மத்திய கத்தோலிக்க உயர்நிலை பள்ளிக்கும் இடையே போட்டி ஒன்று நடத்தப்பட்டது.

மிகவும் விறுவிறுப்புடன் நடந்த இப்போட்டியில் 3-வது சுற்று முடிவடைந்து அடுத்த சுற்றுக்கு தயாராகி சென்றது. இதனால், போட்டி நடந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், பள்ளியில் கால்பந்து போட்டி நடந்த பகுதிக்கு அருகே திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூடு பற்றி தொலிடோ காவல் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில் தெரிவித்துள்ளதாவது, "நேற்றிரவு 9.32 மணியளவில், கால்பந்து போட்டி நடந்த பகுதியில் இருந்த காவல் துறை அதிகாரி ஒருவர், லூக்காஸ் கவுன்டி என்ற காவலர்களுக்கு, விட்மர் நினைவு மைதானத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது என்று  தெரிவித்து உள்ளார். 

இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி நடத்துபவர்கள், போட்டியாளர்கள் உள்ளிட்டோரை பாதுகாப்புடன் வெளியேற்றும் பணியில் அந்த அதிகாரி ஈடுபட்டு உள்ளார். பாதிக்கப்பட்டோரை தேடியும் உள்ளார்" என்று தெரிவித்து உள்ளது. 

இதுகுறித்து போலீசார் தெரிவித்துள்ளதாவது, "இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில், இரண்டு முதியவர்கள் மற்றும் இளைஞர் ஒருவர் என்று மொத்தம் மூன்று பேர் காயமடைந்து கால்பந்து மைதானம் அருகே கிடந்து உள்ளனர். 

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உடனடியாக நிகழ்விடத்திற்குச் சென்று, காயமடைந்த நபர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர். மேலும், சம்பவ பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். 

இதுவரை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பிடிபடவில்லை. அவரை பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.4 லட்சம் பரிசு அளிக்கப்படும்" என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். இதைத் தொடர்ந்து விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america food ball match gun fight


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->