ஜி20 அமைப்பின் தலைமையேற்ற இந்தியாவிற்கு அமெரிக்கா ஆதரவு.! - Seithipunal
Seithipunal


கடந்த 1999-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஜி-20 அமைப்பு. இதில் சீனா, ரஷ்யா, இந்தியா இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பினர்களாக உள்ளன.

மேலும் இந்த அமைப்பின் தலைமை பொறுப்பை ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாடு தலைமை தாங்கும். கடந்த ஓராண்டாக இந்தோனேசியா தலைமை வகித்ததைத் தொடர்ந்து தற்பொழுது ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா. அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில் ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியா, அமெரிக்காவின் வலுவான நட்புறவு நாடு என்றார்.

மேலும் பருவநிலை மாற்றம், எரிசக்தி, உணவு நெருக்கடி ஆகிய சவால்களை எதிர்கொள்ளும் இவ்வேளையில் ஜி20 அமைப்பிற்கு தலைமை பொறுப்பேற்க்கும் இந்தியாவிற்கும், எனது நண்பர் பிரதமர் மோடிக்கும் எனது ஆதரவை அளிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America supports India to lead the G20 organization


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->