நள்ளிரவில் அமேசான் மேலாளருக்கு நேர்ந்த கொடூரம் - திட்டமிட்ட சதியா? போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


நள்ளிரவில் அமேசான் மேலாளருக்கு நேர்ந்த கொடூரம் - திட்டமிட்ட சதியா? போலீசார் விசாரணை.!

நாட்டின் தலைநகரான டெல்லியில் பஜாபுரா பகுதியில் அமேசான் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் மூத்த மேலாளராக ஹர்பிரீத் கில் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு தனது நண்பர் கோவிந்த் சிங் என்பவருடன் சுபாஷ் விஹார் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென இரண்டு இருசக்கரவாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கில்லை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பித்துச் சென்றனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இருவரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஹர்பிரீத் கில் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் கோவிந்த் சிங்கிற்கு மட்டும் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக லோக் நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், விரைந்து வந்து சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி கொலையாளிகள் யார்? எதற்காக கில்லை சுட்டார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமேசான் மேலாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amezon menager kill at midnight in delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->