அதானி குழுமம் விவகாரத்தில் பயப்பட எதுவும் இல்லை.. அமித்ஷா பேச்சு..!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவைச் சேர்ந்த பங்கு முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அதானி குழுமம் குறித்து வெளியீட்ட அறிக்கையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்தியா முழுவதும் அதானி குழுமத்திற்கு எதிராக குரல் எழுந்த நிலையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேலும் இந்த அறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் கடுமையாக சரிந்து உள்ளது. உலக பணக்காரர் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருந்த கௌதம் அதானி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதானி குழுமம் பங்குச்சந்தை மோசடி தொடர்பாக விவாதிக்க கோரியும், நாடாளுமன்ற நிலை குழு விசாரணை நடத்த கோரியும் எதிர்க்கட்சிகள் கடும் அமலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசும் பிரதமர் மோடியும் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இந்த நிலையில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா முதன் முறையாக அதானி குழுமம் விவகாரம் குறித்து பதில் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் அதானி குழுமம் விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லாததால் அதை பற்றி பயப்பட ஏதுமில்லை..

நாடாளுமன்றத்தில் பலரது பேச்சுக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதானி குழுமம் பாஜகவை ஆதரிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் சட்டப்பேரவை பொது தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெறும் என பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit Shah said nothing to fear in the Adani group issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->