முன்பே எச்சரித்தோமே...! கோட்டை விட்ட கேரள அரசு! பெரும் அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட அமித்ஷா!
Amit shah say about Kerala Vayanadu Landslide issue
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த 3 நிலச்சரிவுகளில் சிக்கி 184 பேர் பலியாகி உள்ளனர். மேலும் நிலச்சரிவில் புதையுண்ட 100க்கும் மேற்பட்டோரை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதில் மேலும் பல எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று தெரிய வருகிறது. இந்த விவகாரம் குறித்த இன்று பாராளுமன்றத்தின் மக்கள் மாநிலங்களவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பதில் அளித்து உரையாற்றியதில், "கேரளாவுக்கு கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பே கனமழை குறித்து மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதே போல் குஜராத் மாநிலத்தில் சூறாவளி ஏற்பட்டபோது, அது குறித்து மூன்று நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுத்தோம். இதனை புரிந்து கொண்ட குஜராத் மாநில அரசு, துரிதமாக செயல்பட்டு இழப்புகள் எதுவும் ஏற்படாமல் நடவடிக்கை மேற்கொண்டது.
தற்போதும், கேரள மாநிலத்திற்கு இரண்டு முறை மழை மற்றும் நிலச்சரிவு குறித்து எச்சரிக்கை மத்திய அரசு விடுத்தது. ஆனால் இந்த எச்சரிக்கையை கேரள மாநில அரசு புறம் தள்ளியது ஏன்?
பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றாதது ஏன்? மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கையை அடுத்து தேசிய பேரிடர் மீட்பு படை முன்கூட்டியே அந்த பகுதிக்கு சென்று விட்டது" என்று அமித் ஷா பதிலளித்து உரையாற்றினார்.
English Summary
Amit shah say about Kerala Vayanadu Landslide issue