தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை... கொந்தளிக்கும் அமித் ஷா.! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கர்நாடகத்தில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றம் தொடர்பாக முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும் மக்களவை உறுப்பினருமான பிரஜ்வால் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்க கர்நாடகா அரசை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அசாம் மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமித் ஷா, நாட்டு பெண்களுக்கு உறுதுணையாக நிற்பதே பா.ஜ.கவின் நிலைப்பாடு. 

பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ்தான் ஆட்சி செய்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

மாநிலத்தின் சட்டம், ஒழுங்கில் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. மாநில அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணைக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். 

எங்களது கூட்டணி கட்சியான மஜதவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கர்நாடகத்தில் கட்சியின் மேல்நிலை குழு இன்று ஆலோசனை நடத்துகிறது. பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit Shah says Devekaluda grandson against action 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->