மூவர்ணக்கொடியுடன் புகைப்படம் எடுங்கள் - மத்திய அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் சவலைதளப்பாக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:- 

"கடந்த 2 ஆண்டுகளாக, வீடுதோறும் மூவர்ண கொடியை ஏற்றும் நிகழ்வு ஒரு தேசிய இயக்கம் ஆக உருவெடுத்துள்ளது. இது ஒவ்வொரு இந்தியரிடத்திலும் அடிப்படை ஒற்றுமையை விழித்தெழ செய்துள்ளது.

இந்த இயக்கம் இன்னும் வலுப்பட வேண்டும் என்று குடிமக்கள் அனைவரிடமும் வேண்டுகோளாக வைக்கிறேன். அதே ஆர்வத்துடன் மீண்டும் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

உங்களுடைய வீடுகளில் நம்முடைய பெருமையை, நம்முடைய மூவர்ண கொடியை ஏற்றுங்கள். அந்தக் கொடியுடன் செல்பி புகைப்படம் எடுத்து, அதனை https://harghartiranga.com என்ற ஹர்கர் திரங்கா வலைதளத்தில் பதிவேற்றுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

அதன் படி, வருகிற 9-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அனைவருடைய வீடுகளிலும் மூவர்ண கொடியை ஏற்றும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. அதனை செல்பியாக புகைப்படம் எடுத்து அதற்கான வலைதளத்தில் பதிவேற்றும்படியும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amithsha request photo click with national flag


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->