தமிழர்கள் இந்தியையும் கற்றுக்கொள்ள வேண்டும்.. உள்துறை அமைச்சர் அமித்ஷா.!
Amithsha request to Learn hindhi
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், அனைத்து இந்திய மொழிகளையும் பாதுகாப்பதும் உயர்த்துவதும் பட்டம் பெரும் உங்களின் அனைவரின் கடமை. அதற்குக் காரணம் அதுதான் நமது கலாச்சாரம், பண்பாடு, வரலாறு. நாம் நமது மொழிகளை வலுவாக்க வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கை 2020இன் முக்கிய அம்சம் குழந்தைகளுக்கு அவர்களின் தாய் மொழியை பயிற்றுவிப்பது. குழந்தைகள் ஆங்கிலத்துடன் பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளையும் கற்க வேண்டும். ஆனால் குஜராத்தை சேர்ந்த ஒரு குழந்தை குஜராத்தி மொழியுடன் இந்தியையும், அசாமை சேர்ந்த ஒரு குழந்தை அசாம் மொழியுடன் இந்தியையும் கற்க வேண்டும்.
அதேபோல் தமிழர்கள் தமிழுடன், இந்தி மொழியை கற்க வேண்டும் இவ்வாறு நடந்தால் நம் நாடு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது. இங்கு பட்டம் பெற்றோர் அனைவரும் சமஸ்கிருத அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது வேதங்களிலும் சமஸ்கிருத மொழியிலும் அறிவு செல்வம் நிறைந்துள்ளது. அவற்றை நீங்கள் படிக்கும் போது வாழ்வில் எந்த பிரச்சினையையும் உங்களால் எளிதாக தீர்க்க முடியும்.
English Summary
Amithsha request to Learn hindhi