மகாராஷ்டிரா : தானேவில் சூறைக் காற்றுக்கு விளம்பர பலகை சரிந்து விழுந்து விபத்து.. வாகனங்கள் சேதம்..!! - Seithipunal
Seithipunal



மகாராஷ்ட்ரா மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் தானே மாவட்டத்திலும் இன்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 

இதன் காரணமாக தானே மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இந்நிலையில் தானே மாவட்டத்தில் இன்று காலை முதல் சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக தானே மாவட்டத்தின் கல்யாண் நகரில் உள்ள சஹாஜானந்த் சவுக் என்ற பகுதியில் உள்ள கடை ஒன்றில் வைக்கப் பட்டிருந்த விளம்பரப் பலகை ஒன்று சூறைக் காற்றுடன் பெய்யும் கனமழை காரணமாக முழுவதுமாக பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. 

இந்த விபத்தில் விளம்பரப் பலகை வைக்கப் பட்டிருந்த இடத்தில நிறுத்தி வைக்கப் பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. உயிர்ச் சேதம் குறித்து எதுவும் தகவல் வெளியாகவில்லை. 

அந்த விளம்பரப் பலகையின் கீழ் யாரேனும் நின்றிருந்தார்களா என்று சரிவர தெரியாத நிலையில், மீட்புக் குழுவினர் விபத்து நடந்த சஹாஜானந்த் சவுக் பகுதிக்கு விரைந்துள்ளனர். இதனிடையே இந்தப் பகுதியில் விளம்பரப்பலகை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. 

சமீபத்தில் தான் மும்பையில் ராட்சத விளம்பரப் பலகை ஒன்று சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் தானேவில் நடந்துள்ள இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

An Advertisement Board Fell Down in Storm in Thane Maharashtra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->