ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு திருப்பதியில் சுவாமி தரிசனம்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

இந்நிலையில் இன்று காலை சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். சந்திரபாபு நாயுடுக்கு கோவில் அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் வரவேற்பு அளித்தனர். 

மேலும் அவருக்கு புனித நீர் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சந்திரபாபு நாயுடு, கடந்த 5 ஆண்டுகளில் உலக புகழ்பெற்ற கோவிலாக உள்ள திருப்பதி கஞ்சா, மதுபானம் மற்றும் மதங்களை ஊக்குவிக்கும் மயமாக மாற்றப்பட்டுள்ளது. 

திருமலையில் அடிப்படை தூய்மை, சுகாதாரம் கிடையாது. பிரசாதம் தயாரிப்பதிலும் குறைவு உள்ளதாகவும் திருமலை தேவஸ்தானம் சுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra CM Chandrababu Naidu visits Tirupathi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->