கொடூரம் | எஸ்ஆர்கேஆர் கல்லூரி விடுதி அறையில் வைத்து மாணவனை இரும்பு கம்பியால் தாக்கும் சக மாணவர்கள் - அதிர்ச்சி காணொளி! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்திற்கு உடைபட்ட பீமாவரத்தில் எஸ்ஆர்கேஆர் என்ற பெயரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது.

இந்த கல்லூரி விடுதி அறையில் மாணவர்கள் 3 பேர் சேர்ந்து, மற்றொரு மாணவனை இரக்கமின்றி தாக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட மாணவன் கெஞ்சுவதையும், மன்னிப்பு கேட்பதையும் மீறி 3 மாணவர்கள் தொடர்ந்து அவரைத் தாக்குவது பதிவாகியுள்ளது. 

பலத்த காயமடைந்த மாணவன் மற்றும் தாக்கிய மாணவன் அனைவருமே கணினி அறிவியல் படித்து வருகின்றனர், இந்த சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்ததாக தெரிகிறது.

தற்போது பலத்த காயமடைந்த மாணவன் அங்கித், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மார்பு மற்றும் கைகளில் கொடூரமான காயங்களும் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய ௩ மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra college student attack video


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->