ஆந்திரா | நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் போலிச் சான்றிதழ் மூலம் சோ்க்கை: பள்ளியின் முதல்வர் கைது!
Andhra fake certificates students admit school Principal arrested
விசாகப்பட்டினத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வரை, போலிச் சான்றிதழ்கள் அடிப்படையில் 193 மாணவ-மாணவிகளை பள்ளியில் சேர்த்ததாக தெரிவித்து சிபிஐ கைது செய்தது.
இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, ''ஆந்திரா விசாகப்பட்டினத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வர் சீனிவாச ராஜா என்பவர் 2021-22 ஆம் ஆண்டில் 69 மாணவர்களையும் 20223 ஆண்டில் 124 மாணவர்களையும் மொத்தம் 193 மாணவர்களை போலிச் சான்றிதழ் மூலம் பள்ளியில் சேர்த்துள்ளார்.
இதற்காக மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் லஞ்சம் பெற்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் லஞ்ச பணத்தை எஸ்.பி.ஐ வங்கி மற்றும் யூனியன் வங்கிகளில் உள்ள அவரது வங்கி கணக்கில் செலுத்த பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
தகுதி இல்லாமல் மாணவர்களை போலிச் சான்றிதழ்கள் மூலம் பள்ளியில் சேர்த்த குற்றத்திற்காக அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை கேந்திரிய வித்யாலயா சங்கடன் ஆணையரிடம் உரிய அனுமதி பெற்று மேற்கொள்ளப்பட்டது'' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Andhra fake certificates students admit school Principal arrested