ஆந்திரா | கர்ப்பிணி பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம்: எர்ரகொண்டா பாலம் மண்டல பகுதியை  சேர்ந்த கர்ப்பிணிப் பெண் (30 வயது). இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன், கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி இரவு கிருஷ்ணாகிரி மாவட்டத்தில் உள்ள நாகயலங்கா என்ற பகுதியில் கூலி வேலை செல்வதற்காக பாபட்லா மாவட்டம், ரேப்பள்ளி ரெயில் நிலையத்திற்கு சென்றார். 

அவர்கள் இரவு நேரத்தில் சென்றதால் அங்குள்ள ரெயில் நிலைய நடைபாதையில் குடும்பத்தினருடன் படுத்து உறங்கினர். அப்பகுதிக்கு நள்ளிரவு நேரத்தில் வந்த வாலிபர்கள் 2 பேர் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பினர். 

இதனை அடுத்து, கர்ப்பிணி பெண்ணின் கணவரை சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்து ரூ. 750-ஐ பறித்து, பின்னர் வலுக்கட்டாயமாக கர்ப்பிணி பெண்ணை தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். 

அங்கிருந்து தப்பி சென்ற கர்ப்பிணிப் பெண்ணின் கணவர், இது குறித்து ரேப்பள்ளி ரெயில்வே பாதுகாப்பு காவலருக்கு தகவல் தெரிவித்ததில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருந்த 2 வாலிபர்கள் மற்றும் ஒரு சிறுவனை கைது செய்தனர். 

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த விஜய கிருஷ்ணா (வயது 25), நிகில் (வயது 20) என தெரிய வந்தது. ஆந்திராவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தொடர்பான வழக்கு குண்டூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிவில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். 

கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இரண்டு பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra pregnant woman molested case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->