ஆந்திரா, தெலுங்கானா கனமழை எதிரொலி : நடிகர் அல்லு அர்ஜீன் ரூ.1 கோடி நிதியுதவி! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது. விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கனமழை காரணமாக, விஜயவாடா – கூடூர் தடம், காஜிபேட் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால்  ரயில் பாதைகள் மூழ்கி, சேதமடைந்துள்ளன. சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஆந்திரா வழியாக செல்லும் புதுடில்லி, பனாரஸ், அகமதாபாத், புவனேஸ்வர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள்  மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 

இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன்  வெளியிட்டுள்ள தனது எக்ஸ் பக்கத்தில்,ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த மழையினால் ஏற்பட்ட இழப்பு தனக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றும்,அனைவரின் பாதுகாப்புக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த சவாலான காலங்களில், நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக இரு மாநில முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு மொத்தம் ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Andhra Telangana heavy rain reverberates actor Allu Arjun Rs 1 crore funding


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->