அணு உலை வெடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள அச்சுதாபுரம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள Escientia என்கிற மருந்து நிறுவனத்தில் அணு உலை வெடித்து சிதறியது. இந்த விபத்து சம்பவத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:- "அச்சுதாபுரம் மருந்து நிறுவன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விசாகா மருத்துவமனையில் நேரில் பார்வையிட்டேன்.அவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தைரியம் கொடுத்தேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளேன்.

சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடும், படுகாயமடைந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சமும், சிறு காயமடைந்தவர்களுக்கு ரூ. தலா 25 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும்.

எதிர்காலத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக நிற்போம். விபத்துகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andira cm chandra babu nayudu compensation announce to factory blast died peoples family


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->