ஆந்திர மாநிலத்தில் செம்மரங்களை வெட்டியதாக தமிழர்கள் ஏழு பேர் கைது.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் செம்மரங்களை வெட்டியதாக தமிழர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் சித்தூர் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்துவதாக ஆந்திரா போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சித்தூர் வனப்பகுதி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின்போது கடத்தப்பட்ட செம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் 3 கோடி ஆகும். இதை அடுத்து அவர்களிடமிருந்து 3 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தப்பட்ட இந்த செம்மரக்கட்டைகளை வெட்டியதாக தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andira police arrested tamilnadu seven persons


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->