தமிழக பட்ஜெட் 2025; முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு..!
Minister Thangam Thennarasu has thanked the Chief Minister for his help in preparing the Tamil Nadu budget
2025-2026-ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
இதன் பொது, அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்தமை தொடர்பாக தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
" தாயுமானவராக நின்று தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வரலாற்று சிறப்புமிக்க 2025 நிதிநிலை அறிக்கையை உருவாக்க உறுதுணையாக இருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Thangam Thennarasu has thanked the Chief Minister for his help in preparing the Tamil Nadu budget