கற்பனை மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள் கும்ப ராசியினர்..!
Common traits of Aquarius people
ஜோதிடத்தில் 11ஆம் இடத்தில் வரக்கூடிய ராசி கும்பம். ராசியின் ஆபத்து சனி பகவான். ஒரு குடம் போன்ற அமைப்பில் உள்ளதே கும்பம். இந்த ராசியில் பிறந்தவர்கள் ஒரு குடத்தைத் திறந்து பார்த்தால்தான் உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரிவது போல, உங்கள் மனதில் இருப்பதைப் பிறர் அறியாதபடி மறைத்து வைத்திருப்பீர்கள்.
உங்களிடம் தொடர்ந்து பத்து நிமிஷம் பேசினால்தான் உங்கள் மனதில் இருப்பதைப் பிறர் அறிய முடியும். அந்த லாவுக்கு ரகசியமானவர்கள். உங்களிடம் பல திறமைகள் இருந்தாலும், அதனை சரியான முறையில் வெளிப்படுத்தத் தெரியாது. உங்களுக்கு பிறரின் சரியான தூண்டுதல் இருந்தால் மட்டுமே, உங்கள் திறமைகளை வெளிப் படுத்த முடியும்.

கும்ப ராசியினருக்கு உங்களுடைய பிள்ளைகளால் உங்கள் அந்தஸ்து உயரும். ராசியில், 05-ஆம் இடத்துக்கு உரிய புதனே உங்களின் 08-ஆம் இடமான கன்னிக்கும் அதிபதி. இதனால், உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நீண்ட ஆயுள் உண்டு.
ஜீவன ஸ்தானமாகிய 10-ஆம் இடம் விருச்சிகம். அதன் அதிபதி செவ்வாய் என்பதால் நீங்கள் ஜோதிடம், மாந்த்ரீகம் போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவீர்கள். அத்துடன், கெமிக்கல், மருந்துப் பொருட்கள் தயாரிப்பு போன்ற துறைகளில் பணிபுரிவீர்கள். ராசியில் 11-ஆம் இடம் லாப ஸ்தானம். இதில் கோதண்ட குரு என்னும் தனுசு குரு அந்த இடத்தின் அதிபதியாக உள்ளார். இதனால் அரசாங்கம் தொடர்பான தொழில்களில் ஒப்பந்ததாரராக இருந்து தொழில் செய்வீர்கள். எதிர்பாராத வகையில் மொத்தமாகப் பணம் வரும். அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தோடு தொடர்புடையவர் களால் அதிக லாபம் பெறுவீர்கள். கும்ப ராசி காரர்கள் பிற இனம் மதம் சார்ந்தவர்களோடு எப்போதும் தொடர்பில் இருப்பீர்கள்.

சனி பகவான் ஆளக்கூடிய கும்ப ராசியில் பிறந்துள்ளதால் நிலையற்ற மனநிலை கொண்டவர்களாக இருப்பினும் இவர்கள் குடும்பம் மற்றும் பணியிடத்தில் ஆளுமைத் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். உங்களிடம் கற்பனை மற்றும் தொலைநோக்கு பார்வை அதிகமாக இருக்கும். நீங்கள் உங்கள் வார்த்தை மற்றும் செயலில் உறுதியாக இருப்பார்கள். அதனால் எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அதை எப்படியாவது நிறைவேற்றுவீர்கள்.
நீதி, சட்டம் சார்ந்த விஷயத்தில் சரியாக நடந்து கொள்வீர்கள். எந்த ஒரு அநீதியையும் பொறுத்துக் கொள்ள மாட்டீர்கள். தங்களின் வாழ்க்கையை ஒழுங்கான முறையில் நடத்த விரும்புவீர்கள். நீங்கள் அறிவாளிகளாகவும், புத்திசாலித்தனமாகவும்,கடின உழைப்பாளிகளாகச் செயல்படக் கூடியவர்கள்.
கும்ப ராசியில் பிறந்த நீங்கள் எல்லா சக்திகளும் நிறைந்த ஆலயத்துக்குச் செல்லும்போது, பெரிய மாற்றங்கள் உங்கள் வாழ்வில் நீங்கள் செல்ல வேண்டிய ஆலயம் கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயம்.

ஈசனின் திருவிளையாடலால் அமுதக் கும்பம் மகாமகக் குளத்தில் அமுதமாகக் கொட்டியது. ஈசன் அத்தலத் திருமண்ணில் தனது அருள் நீரைப் பொழிந்து பிசைந்து லிங்க உருவம் செய்தார். அந்த ஆதிலிங்கத்தினுள் பரமசிவன் பெருஞ்சோதி வடிவமாக உட்புகுந்தார். கும்பம் கும்பேஸ்வரர் ஆனது.
அதாவது, பிரம்ம சிருஷ்டிக்கு முற்பட்டதால் ஆதி கும்பேஸ்வரர் எனவும், இன்னும் பல்வேறு திருநாமங்களோடும் பல யுகாந்திரங்களுக்கு முன்பு தோன்றிய கும்பேசுவரர் இன்றைக்கும் பேரருள் புரிகிறார். அம்பிகையின் திருநாமம் சர்வ மங்களங்களையும் அருளும் மங்களாம்பிகை ஆகும். இங்கு சென்று வர உங்களுக்கு நல்ல காரியங்கள் நடந்தேறும்.
ராசியில் அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்கள் இதில் அடங்கும்.
English Summary
Common traits of Aquarius people