ஐ.பி.எல். 2025; சேப்பாக்கத்தில் இடம்பெறும் போட்டிகளுக்கு செல்ல மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம்..!
IPL 2025 Free travel on city buses to attend matches in Chepauk
ஐ.பி.எல். டி-20 போட்டியின் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த உள்ளூர் போட்டி தொடர் வருகிற 22-ஆம் தேதி தொடங்குகிறது.
போட்டியின் முதல் லீக் ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இதில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
சென்னை அணி தனது முதல் லீக் ஆட்டத்தை வரும் 23-ஆம் தேதி மும்பை அணியுடன் சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. இந்நிலையில், சி.எஸ்.கே நிர்வாகம் தங்களது ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, 2025 ஐ.பி.எல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அத்துடன், இந்த இலவச பயணம், போட்டி தொடங்குவதற்கு 03 மணி நேரத்திற்க்குள் மட்டுமே செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.எஸ்.கே உள்ளூர் போட்டிகள் (சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகள்);
சென்னை - மும்பை; மார்ச் 23 - இரவு 7.30 மணி
சென்னை - பெங்களூரு; மார்ச் 28 - இரவு 7.30 மணி
சென்னை - டெல்லி; ஏப்ரல் 05 - மாலை 3.30 மணி
சென்னை - கொல்கத்தா; ஏப்ரல் 11 - இரவு 7.30 மணி
சென்னை - ஐதராபாத்; ஏப்ரல் 25 - இரவு 7.30 மணி
சென்னை - பஞ்சாப்; ஏப்ரல் 30 - இரவு 7.30 மணி
சென்னை - ராஜஸ்தான்; மே 12 - இரவு 7.30 மணி
English Summary
IPL 2025 Free travel on city buses to attend matches in Chepauk