கோபம் லாபமானது..பந்தயத்தில் தோற்ற சேவலை வறுத்து ஏலம் விட்ட உரிமையாளர்!  - Seithipunal
Seithipunal


பந்தயத்தில் தோற்ற சேவலை வறுத்து ஏலம் விட்டதில் அதிக லாபம் கிடைத்ததாக அதன் உரிமையாளர் தெரிவித்தார். 

ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையையொட்டி பாரம்பரிய சேவல் சண்டை பந்தயம் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் சண்டை சேவல்கள் மீது பந்தயமாக கோடிக்கணக்கில் பலர் பணத்தை கட்டி விளையாடினர் .

சேவல் பந்தயத்தில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் பணம் கைமாறியதாக சொல்லப்படுகிறது.இந்த நிலையில் இந்த சேவல் பந்தயத்தில் ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டம், என்.ஆர். பேட்டையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது  பங்கேற்று தோற்றுப் போனது.

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் அதை கொன்று ஏலம் விட முடிவு செய்து அதை கொன்று  இது குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். இதனைக் கண்ட ஏராளமானோர் ஏலத்தில் கலந்து கொண்டனர்.

சேவலை கொன்று சுத்தம் செய்து முழு சேவலாக எண்ணையில் வறுத்ததையடுத்து  பின்னர் வறுக்கப்பட்ட சேவல் ஏலம் விடப்பட்டது. பலரும் போட்டி போட்டு சேவல் கறியை ஏலம் கேட்டனர். இதில் ஜாலி புடியை சேர்ந்த மாகந்தி நவீன் சந்திரபோஸ் என்பவர் ரூ.1, 11.111 ரூபாய்க்கு வறுக்கப்பட்ட சேவலை ஏலத்தில் எடுத்தார்.இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.இதையடுத்து  பந்தயத்தில் தோற்ற சேவலை வறுத்து ஏலம் விட்டதில் அதிக லாபம் கிடைத்ததாக அதன் உரிமையாளர் தெரிவித்தார். உரிமையாளர் கோபம் அவருக்கு லாபத்தை கொடுத்தது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 Anger is profitable The owner of the that lost the race was auctioned off


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->