தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் நியமனம்! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், 1990-ம் ஆண்டு இந்திய அரசாங்கம் தேசிய பெண்களுக்கான ஆணையம் என்ற ஒரு ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கியது. இந்த மசோதாவை 1990-ம் ஆண்டு ஜனாதிபதி  நிறைவேற்றியதை தொடர்ந்து, இந்தியாவின் முதல் தேசிய பெண் ஆணையம் நடைமுறைக்கு வந்தது.

இந்த நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய உறுப்பினராக, டாக்டர் அர்ச்சனா மஜும்தார் அதிகாரப்பூர்வமாக  நியமிக்கப்படுகிறார். அந்த வகையில், தேசிய மகளிர் ஆணைய சட்டம் 1990-ன், பிரிவு 3-ன் கீழ் நடைபெறும் நியமனத்தின்படி, 3 ஆண்டுகளுக்கு அல்லது 65 வயது ஆகும் வரை, இவற்றில் எது முதலில் வருகிறதோ, அதுவரையிலான காலஅளவுக்கு இந்த நியமனம் செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய உறுப்பினர்களின் பெயர்களையும் அரசு அறிவித்து உள்ளது.

அந்த வகையில், டாக்டர் அர்ச்சனா மஜும்தார் அதிகாரப்பூர்வ முறையில் புதிய உறுப்பினராக நியமிக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ள மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சிக்கான அமைச்சகம், அவர் 3 ஆண்டு காலம் பதவியில் நீடிப்பார் என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Appointment of the national commission for women


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->