யானை சின்னத்தை நீக்குங்கள் - விஜய்க்கு பசக சொன்ன செய்தி!
BSp notice issue to TVK Vijay
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தரப்பில் ஒரு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து பகஜம் சமாஜ் கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சின்னத்தை தமிழக வெற்றி கழக (TVK) கொடியில் இருந்து நீக்க வேண்டுமென கட்சி கொடி வெளியிட்ட நாளிலிருந்து வலியுறுத்தி வருகிறோம்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கபட்ட Central Government Extraordinary Government Gazette Part II, Section 3, Sub-Section (iii)
PROVISIONS OF THE EMBLEMS AND NAMES (PREVENTION OF IMPROPER USE) ACT, 1950 ன் வரையறுக்கப்பட்ட Section 3 விதியின்படி இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அரசு ஆணையின்படி (Government Gazette of India) “ஒரு கட்சி, தங்களுக்கென ஒரு கொடி இருந்தால் அந்த கட்சி கொடியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வழங்கப்பட்ட சின்னத்தை போன்றோ, மற்ற கட்சிகளின் சின்னத்தை போலவோ அல்லது சின்னத்தின் மாற்றுரு போன்றோ தங்கள் கொடியில் சின்னங்கள் அமையாமல் கவனித்து கொள்ள வேண்டியது அக்கட்சியின் தார்மீக பொறுப்பாகும்” என்ற விதியை மீறுவதாக உள்ளது.
மேலும், பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சேபம் தெரிவித்த நிலையில் இன்றுவரை எந்தவிதமான நடவடிக்கை இல்லாத காரணத்தினால் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு வழக்கறிஞர் அணி - மாநில துணை தலைவர் சந்தீப் அவர்களின் அறிவிப்பு இனைத்துள்ளோம்.
இதனையே சட்ட முறையான அறிவிப்பாக கருதி யானை சின்னத்தை நீக்க வேண்டும் என அறிவுருத்துகின்றோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
BSp notice issue to TVK Vijay