ஜம்மு-காஷ்மீரில் பரபரப்பு!...நாங்கள் முஸ்லீம் கட்சியா?...உமர் அப்துல்லா அதிரடி பேச்சு! - Seithipunal
Seithipunal


தேசியவாத மாநாட்டு கட்சி முஸ்லிம்களுக்கான கட்சி என்று எல்லோரும் கூறியதாக ஜம்மு-காஷ்மீர்  முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய மாநாடு கட்சி-காங்கிரஸ் கூட்டணி 49 தொகுதிகளை கைப்பற்றி ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது.

காங்கிரஸ் கட்சி ஆறு இடங்களிலும், பாஜக 29 இடங்களிலும், மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தனர். தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக கடந்த 16-ம் தேதி உமர் அப்துல்லா பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், ஜம்முவில் இன்று  உமர் அப்துல்லா கட்சி தொண்டர்களிடையே பேசினார். அப்போது பேசிய அவர், கடந்த தேர்தலின்போது, தேசியவாத மாநாட்டு கட்சி முஸ்லிம்களுக்கான கட்சி என்று எல்லோரும் கூறியதாக கூறிய அவர், இது காஷ்மீரிகளுக்கான ஓர் அமைப்பு என்று தெரிவித்தார்.

மேலும், ஜம்முவில் இருந்து ஒருவரை துணை முதலமைச்சராக ஆக்கியிருப்பதாக தெரிவித்த அவர், அவரும் ஓர் இந்து தான் என்றும், அவர்கள் தற்போது என்ன கூறுவார்கள் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Excitement in jammu and kashmir are we a muslim party umar abdullah action speech


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->