காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி!
11 members of the same family were killed in the israel attack on gaza
காசாவில் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த போர் தொடங்கி ஓராண்டினை நிறைவு செய்துள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை தாக்கி வந்தனர். இந்த சூழ்நிலையில் பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும் இஸ்ரேல் பதில் தாக்குல் நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், காசாவின் மத்திய பகுதியில் இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்று கூறப்படும் நிலையில், பலியான அனைவரும் மகஜி அகதிகள் முகாமில் தங்கியிருந்ததாக டெய்ர் அல்-பலாவில் உள்ள அல்-அக்சா மருத்துவமனை தெரிவித்து உள்ளது.
English Summary
11 members of the same family were killed in the israel attack on gaza