பிரியங்கா காந்தியை இழிவு படுத்தி பேசுவதா?பாஜக முன்னாள் எம்.பிக்கு புதுச்சேரி மகிளா காங்கிரஸ் கண்டனம்!
Are you talking about Priyanka Gandhi Puducherry Mahila Congress slams ex BJP MP
மரியாதைக்குரிய எங்கள் தலைவி பிரியங்கா காந்தி அவர்களை இழிவு படுத்தி பேசிய ரமேஷ் பிதுரி மீது உடனடியாக பெண்கள் பாதுகாப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும் என புதுச்சேரி மாநில மகிளா காங்கிரஸ்பொதுச் செயலாளர் ரத்னா வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி மாநில மகிளா காங்கிரஸ்பொதுச் செயலாளர் ரத்னா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது :பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பியும், டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ரமேஷ் பிதுரி, தேர்தல் பிரச்சாரத்தின் போது தனக்கு வாக்கு அளித்தால் இந்த தொகுதியில் உள்ள சாலைகளை காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி கன்னங்கல் போல் பளபளப்பாக மாற்றிக் காட்டுவேன் என்று கீழ் தரமான முறையில் ஆபாசமாக பேசி இருக்கிறார்.
பெண்களைப் பற்றி இழிவான முறையில் பேசுவது பிஜேபி தலைவர்களுக்கு கைவந்த கலையாபோச்சு, இந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தான் முற்றிலும் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரேயே இப்படி இழிவுபடுத்துகிறார்கள் என்றால் சாதாரண பெண்களை பிஜேபி தலைவர்கள் எப்படி எல்லாம் பேசுவார்கள் நாம் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மரியாதைக்குரிய எங்கள் தலைவி பிரியங்கா காந்தி அவர்களை இழிவு படுத்தி பேசிய ரமேஷ் பிதுரி மீது உடனடியாக பெண்கள் பாதுகாப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும்.
மேலும் இந்திய தேர்தல் ஆணையம் இவர் தேர்தலில் போட்டியிடாத வண்ணம் செய்ய வேண்டும். மற்றும் பிஜேபி தலைவர்கள் நாட்டு மக்களிடையே இவர் பேசிய பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இது போன்று பேசியதற்காக பிஜேபி தலைவர்களை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
மேலும் மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி இருக்கிறது. ஆதலால் இனி வரும் காலங்களிலாவது பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று மரியாதைக்குரிய ஜனாதிபதி அவர்களுக்கு கோரிக்கை வைக்கின்றேன் என புதுச்சேரி மாநில மகிளா காங்கிரஸ்பொதுச் செயலாளர் ரத்னா வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Are you talking about Priyanka Gandhi Puducherry Mahila Congress slams ex BJP MP