ஓடும் ரெயிலில் ஏடிஎம் வசதி - இனி பணம் எடுக்க அலைய வேண்டாம்.!!
arm service in running train
ஓடும் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் பணத்தை எடுக்கும் விதமாக ரெயில்வே துறை ஏடிஎம் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதுமையான சேவையின் முதல் சோதனை, மன்மாட் மற்றும் மும்பை இடையே இயங்கும் பஞ்சவதி எக்ஸ்பிரஸின் ஏசி பெட்டியில் தொடங்கப்பட்டது. மகாராஷ்டிரா வங்கியால் வழங்கப்பட்ட இந்த ஏடிஎம், ரெயில் பெட்டியின் பின்புறத்தில் ஒரு தற்காலிக பேன்ட்ரி பிரிவில் நிறுவப்பட்டு, ஒரு ஷட்டர் கதவுடன் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை வெற்றிகரமாக இருந்thaalum, மன்மாட் மற்றும் இகத்புரி இடையே, குறைந்த இணையதள வசதி மற்றும் சுரங்கப்பாதைகள் உள்ள பகுதிகளில் சிக்னல் சிக்கல்கள் பதிவாகியுள்ளன. இருப்பினும், இந்த சேவை பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். பயணம் செய்யும் போது யாருக்காவது பணம் தீர்ந்துவிட்டால், அவர்கள் இப்போது ரயில் நிலையத்திற்காக காத்திருக்காமல் எளிதாகப் பணம் எடுக்கலாம்.
ரயிலின் அதிவேகம் மற்றும் அடிக்கடி ஏற்படும் அதிர்வுகளிலும் ஏடிஎம் சீராக செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ரெயிலில் இயந்திரத்தை இயக்க தேவையான மின்சாரம் மற்றும் நெட்வொர்க் ஆதரவுடன் பெட்டி பொருத்தப்பட்டிருந்தது. இந்த சேவையை விரிவுபடுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
English Summary
arm service in running train