காஷ்மீரில் துப்பாக்கி சூடு-என்கவுண்ட்டரில் ராணுவ அதிகாரி வீரமரணம்
Army officer martyred in firing encounter in kashmir
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பட்னிடாப் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரகசிய தகவலின் பேரில், ராணுவத்தினர், பாதுகாப்புப்படையினர், ஜம்மு-காஷ்மீர் போலீசார் இணைந்து அப்பகுதியில் நேற்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பாதுகாப்புப்படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தியனர். தொடர்ந்து பல மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கி சூட்டிற்கு பிறகு, பயங்கரவாதிகள் உதம்பூர் மாவட்ட வனப்பகுதியில் இருந்து தோடா மாவட்ட வனப்பகுதிக்குள் நுழைந்தனர். பின்னர், இன்று காலை பயங்கரவாதிகள் - பாதுகாப்புப்படையினருக்கு இடையே துப்பாக்கி சண்டை மீண்டும் தொடங்கியது. இரு தரப்பிற்கும் இடையே பல மணிநேரம் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
இதில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் ராணுவ அதிகாரி கேப்டன் வீர மரணமடைந்தார். அதேவேளை, பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Army officer martyred in firing encounter in kashmir